Wednesday, September 28, 2016


Kaadhal Sandhya blessed with a Baby Girl.


விமான நிலையத்தில் பொழுதை கழிக்கும் தமன்னா






சினிமாவிலிருந்து பலர் அரசியலுக்கு சென்று கொண்டிருப்பது போல் தற்போது அரசியலில் இருப்பவர்களுக்கும் சினிமா ஆர்வம் வந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மாஜி முதல்வர் குமாரசாமி. இவரது மகன் நிக்கில் குமார். தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாகும் ஜாகுவார் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். புதுமுகம் என்பதால் அவரை பிரபலபடுத்துவதற்காக தந்தையே களம் இறங்கியுள்ளார். அதில் ஒரு கட்டமாக, பிரபல நடிகை ஒருவரை ஒரு பாடலுக்கு நிக்கிலுடன் குத்தாட்டம் போட வைக்க வேண்டும் என்று இயக்குனர் மகாதேவ் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டார். தமன்னாவை ஒப்பந்தம் செய்ய அணுகினர். பட கதையை பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். 

அரசியல் பின்னணி என பெரிய கைகள் படத்தில் சம்பந்தப்பட்டிருந்ததால் தமன்னா ஓ கே சொன்னார். இதற்காக பெரிய சம்பளம் தரப்பட்டது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விதவிதமான உடைகள் அணிந்து ஹீரோவுடன் குத்தாட்டம் போட்டார் தமன்னா. சமீபகாலமாக தமன்னா வீட்டுக்கு சென்று பலநாள் ஆகிவிட்டதாம். தமிழ், தெலுங்கு, இந்தியில் மாறி மாறி படங்கள் நடித்து வருவதாலும் சென்னை, பெங்களூர், மும்பை என்று 2 நாட்களுக்கு ஒரு முறை வெவ்வேறு ஊர்களுக்கு விமானத்தில் பறந்துகொண்டிருப்பதாலும் விமான நிலையத்திலேயே பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். 

'ரஜினி, விஜய், தனுஷ் வேண்டாம். சிவகார்த்திகேயன் ஓ.கே.!' - விஜய் சேதுபதி


'ரஜினி, விஜய், தனுஷ் வேண்டாம். சிவகார்த்திகேயன் ஓ.கே.!' - விஜய் சேதுபதி






வெள்ளிக்கிழமை வந்தால் வீக் எண்ட் மூடு வருகிறதோ இல்லையோ, ஒரு விஜய் சேதுபதி படம் வந்துவிடுகிறது. அந்த அளவிற்கு இந்த வருடம் அதிகப் படங்கள் ரிலீஸாகியிருப்பது விஜய்சேதுபதிக்கு மட்டும் தான். கடந்தவருடம் ஒப்பந்தம் செய்யப்பட்ட, கடந்தவருடம் படப்பிடிப்பு முடிந்தப் படங்கள் ஒட்டுமொத்தமாக இந்த வருடம் ரிலீஸானதே இதற்கு காரணம்.
சேதுபதி, காதலும் கடந்துபோகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை படங்களைத் தொடர்ந்து , அக்டோபர் 7ல் ரத்னசிவா இயக்கத்தில் ”றெக்க” ரிலீஸ் ஆகவிருக்கிறது. விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்கும் இப்படத்திற்கான டிரெய்லர் சமீபத்தில் ரிலீஸானது. தவிர, விர்று விர்று பாடல் மேக்கிங் வீடியோவில் விஜய்சேதுபதிக்கு பின்னால் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே பட போஸ்டர் இருக்கும்.  றெக்க படத்தின் ஓப்பனிங் பாடலான விர்று விர்று..... பாடல் காட்சியை திரையரங்கில் படமாக்கியிருக்கிறார்கள். பொதுவாக இந்தமாதிரியான பாடல்களில்  சீனியர் நடிகர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என்று தான் முன்னிலைப்படுத்துவார்கள். ஆனால் விஜய்சேதுபதி தனக்கு போட்டியான நடிகரையே கொண்டாடியிருக்கிறார். 
இதுகுறித்து விசாரித்தபோது, ரஜினி, கமல், அஜித், விஜய், மற்றும் தனுஷ்  என்று இவர்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்குமாறு விஜய்சேதுபதியிடம் கூறியிருக்கிறார் ரத்னசிவா. ஆனால் விஜய்சேதுபதியின் தேர்வு சிவகார்த்திகேயன். இதனால் ஒட்டுமொத்த யூனிட்டே ஆச்சரியத்தில் கண் உயர்த்தியிருக்கிறார்கள்.  
இதுகுறித்து விஜய்சேதுபதி கூறும்போது, “ ரஜினி, கமலைத்தான் வழக்கமாக அனைத்துப் படங்களிலும் இடம்பெறும் பாடல்களில் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல் எனக்கு போட்டியா இன்றைக்கு சிவகார்த்திகேயன் தான் பார்க்கப்படுகிறார். என் சமகால நடிகரை நானே கொண்டாடுவது தான் சரி என்று தோன்றியது. மான்கராத்தே போஸ்டரைத் தேர்வு செய்து, அந்த போஸ்ஸையும் செய்ய நான் முன் வருவதே சரி என்று தோன்றியது” என்கிறார் விஜய்சேதுபதி. 
றெக்க படம் ரிலீஸாகும் அதே நாள் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த ரெமோ படமும் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.  #ஆரோக்கியமான போட்டி