Wednesday, September 28, 2016

விமான நிலையத்தில் பொழுதை கழிக்கும் தமன்னா






சினிமாவிலிருந்து பலர் அரசியலுக்கு சென்று கொண்டிருப்பது போல் தற்போது அரசியலில் இருப்பவர்களுக்கும் சினிமா ஆர்வம் வந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மாஜி முதல்வர் குமாரசாமி. இவரது மகன் நிக்கில் குமார். தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாகும் ஜாகுவார் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். புதுமுகம் என்பதால் அவரை பிரபலபடுத்துவதற்காக தந்தையே களம் இறங்கியுள்ளார். அதில் ஒரு கட்டமாக, பிரபல நடிகை ஒருவரை ஒரு பாடலுக்கு நிக்கிலுடன் குத்தாட்டம் போட வைக்க வேண்டும் என்று இயக்குனர் மகாதேவ் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டார். தமன்னாவை ஒப்பந்தம் செய்ய அணுகினர். பட கதையை பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். 

அரசியல் பின்னணி என பெரிய கைகள் படத்தில் சம்பந்தப்பட்டிருந்ததால் தமன்னா ஓ கே சொன்னார். இதற்காக பெரிய சம்பளம் தரப்பட்டது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விதவிதமான உடைகள் அணிந்து ஹீரோவுடன் குத்தாட்டம் போட்டார் தமன்னா. சமீபகாலமாக தமன்னா வீட்டுக்கு சென்று பலநாள் ஆகிவிட்டதாம். தமிழ், தெலுங்கு, இந்தியில் மாறி மாறி படங்கள் நடித்து வருவதாலும் சென்னை, பெங்களூர், மும்பை என்று 2 நாட்களுக்கு ஒரு முறை வெவ்வேறு ஊர்களுக்கு விமானத்தில் பறந்துகொண்டிருப்பதாலும் விமான நிலையத்திலேயே பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். 

No comments:

Post a Comment